வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கிட்டங்கியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கிட்டங்கியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது;

Update:2021-04-01 23:19 IST
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின்போது பயன்படுத்த பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 429 வாக்குப்பதிவு எந்திரங்கள், 465 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு 501 வாக்குப்பதிவு எந்திரங்கள், 543 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 1036 வாக்குப்பதிவு எந்திரங்கள், 561 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 1062 வாக்குப்பதிவு எந்திரங்கள், 575 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை கூட கிட்டங்கியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவை சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்