கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் 3 நாட்களாக வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. முதல் நாளன்று தேர்தல் பொது பார்வையாளர் விஜயகுமார்மன்ட்ரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நடைபெறும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் பார்வையிட்டுதேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வைதேகி, பன்னீர்செல்வம், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரளா, வட்ட வழங்கல் அலுவலர் சீத்தாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.