சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

Update: 2021-04-01 16:50 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை தலைமையில், ஏட்டுகள் சங்கரநாராயணன், சுந்தரேசன் ஆகியோரை கொண்ட நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு குளத்தூர் பிரிவு சாலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தேவபாண்டலத்தை சேர்ந்த சகாப்தீன் என்பவர் ரூ.74 ஆயிரத்து 100 வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் உதவிப் பொறியாளர் கணேசன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு புத்திராம்பட்டுசாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பிரம்மகுண்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ரூ.95 ஆயிரம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர்.


மேலும் செய்திகள்