ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர ஓட்டு வேட்டை

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்.

Update: 2021-04-01 18:30 GMT
நாசரேத், 

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணல்குண்டு, கடையனோடை, குளத்துகுடியிருப்பு, தடியன் காலனி, தேமாங்குளம், தவசிநகர், முதலைமொழி, தங்கையாபுரம், மானாட்டூர், செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செம்பூரில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மலர்தூவி அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேசியதாவது:-

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 15 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறவர் தொகுதியின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை. 3 முறை அமைச்சராக இருந்தும் அவர் மக்களுக்கு என்ன நல்லது செய்தார். 

நம்முடைய எதிர்காலத்தை நாம் விற்றுவிட வேண்டாம். உங்களோடு நான் இருப்பேன். தொகுதி மேம்பாட்டிற்காகவும், தொகுதி மக்களுக்காகவும் நான் உழைப்பேன் என நான் உங்களிடத்தில் உறுதி கூறுகிறேன். அரசாங்கத்தின் நலத்திட்ட பணிகளும், மேம்பாட்டு பணிகளும், எந்த ஊழலும், லஞ்சமும் இன்றி மக்களை சென்றடையும். நான் சொத்து சேர்க்க அரசியலுக்கு வரவில்லை. தொகுதியில் உள்ள 25 மாணவர்களுக்கு எனது கல்லூரியில் ஆண்டுதோறும் இலவச பொறியியல் கல்வியை அளிப்பேன். தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைத்திட வேலை வாய்ப்பு முகாம் ஆண்டுதோறும்     நடத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். ஏப்ரல் 3-ந் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மாவட்ட துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கரும்மன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தி.மு.க. கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், ஆனந்தமுத்து, மாவட்ட விவசாய அணி சங்கர், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட துணை செயலாளர் கருணாகரன், செங்குளம் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டை, நகர தலைவர் சதிஷ்குமார், சுந்தரராஜன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் முத்துராமலிங்கம் சங்கர், பாலமுருகன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு ஆதரவாக சினிமா நடிகர் இமான் அண்ணாச்சி சாத்தான்குளம் வந்தார். அங்கு புதிய பஸ் நிலையத்தில் கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு ஆதரவு திரட்டினார்.பின்னர் அவர் பேய்க்குளம் பகுதிக்கு திறந்த ஜீப்பில் நின்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இப்பகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஊர்வசி அமிர்தராஜ் நல்ல வேட்பாளர். சமூக சேவகர். ஏழைகளுக்கு உதவுபவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என குணம் உள்ளவர். அவருக்கு கை சின்னத்தில் உங்கள் வாக்குகளை தாருங்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதுவெல்லாம் நம் கையில்தான் உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை, அதன்படி முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை ஏறி கொண்டே இருக்கிறது. தான் முதல்வராக ஆனதும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உடைக்கப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியதை கேட்டு அனைத்து அ.தி.மு.க.வினரும் குஷியாகி தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் இந்த ஆட்சி பல கோடி மோசடி செய்துள்ளது. தி.மு.க. கூட்டணியினர் அனைவரும் நல்ல எண்ணத்துடன் வாக்கு கேட்டு வருகின்றனர். 

மதுவிலையும் ஏற்றம் கண்டு விட்டது. இந்த ஆட்சியின் அவல நிலை பார்த்து எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது தேர்தல் வந்து விட்டது. புதுசா கட்சி ஆரம்பித்தவர்கள் அனைவரும் முதல்வர் ஆகிவிடலாம் என கனவு காண்கின்றனர். உங்கள் வாக்கு சிதறாமல் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள், ஊர்வசி அமிர்தராஜ் கடந்த 11 ஆண்டுகளாக இந்த தொகுதியில் ஏழைகளுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். அவரை சட்டமன்றத்துக்கு அழைத்து செல்வது உங்கள் கையில் தான் உள்ளது. மறந்து விடாதீர்கள். கை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

பிரசார நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஜோசப் அலெக்ஸ், சாத்தான்குளம் ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், நகர தலைவர் இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலர் பார்த்திபன், ஒன்றிய அவைத் தலைவர் கோயில்ராஜ், கிளை செயலர்கள் ஜான், ஜாண்சன், ஞானஜேம்ஸ். ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் திருமணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்