கொடைக்கானலில் பலத்த மழை

கொடைக்கானலில் பலத்த மழைக்கு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.;

Update: 2021-04-01 15:21 GMT
கொடைக்கானல்: 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நேற்று காலை வெப்பம் நிலவிய நிலையில், பிற்பகல் 2.30 மணி முதல் அரை மணி நேரம் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்தது. மீண்டும் மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. 

மாலை 6 மணி வரை மழை நீடித்தது. இதேபோல் கொடைக்கானல் புறநகர் பகுதியிலும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. 

இந்த மழையினால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், நட்சத்திர ஏரிக்கும் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. 

இதுமட்டுமின்றி கொடைக்கானல் பகுதியில் பயிரிட்டிருந்த விவசாய பயிர்களுக்கு ஏற்றதாக கோடைமழை இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை எதிரொலியாக கொடைக்கானலில் இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. 

இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்