கம்பம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

உத்தமபாளையத்தில் உள்ள புதிய தாலுகா அலுவலகத்தில் கம்பம் தொகுதி் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

Update: 2021-04-01 14:18 GMT

உத்தமபாளையம்:
கம்பம் தொகுதியில் மொத்தம் 392 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதிசெய்யும் எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு உத்தமபாளையம் புதிய தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரேண்டம் முறையில் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படம், பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் நடைபெற்றது. இதனை கம்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உதய ராணி ஆகியோர் ஆய்வு செய்தனர், அப்போது துணை தாசில்தார்கள் சுருளி, முருகன், கண்ணன் ஆகிேயார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்