சி. ஐ .டி நகரில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களும் மா.சுப்பிரமணியத்துக்கு வாக்கு சேகரிப்பு
சி. ஐ .டி நகரில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களும் மா.சுப்பிரமணியத்துக்கு வாக்கு சேகரித்தனர்.
சைதாப்பேட்டை தி.மு.க வேட்பாளர் மா.சுப்ரமணியன் நடைப்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே, அதை தனது மக்கள் பணியிலும் சேர்த்துக் கொண்டார், தொகுதியில் நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர், இந்த தேர்தல் பிரசாரத்திலும் வாகனங்களை பயன்படுத்தாமல், தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும், தொகுதி முழுவதும் நடந்தே சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.
கடந்த 13 நாட்களில் 125 மணிநேரம் தொகுதி முழுவதும் நடந்தே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் களத்தில் சுவையான சம்பவங்கள் நடக்கும், அதிலும் சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன் பிரசாரத்தில் அவர் செய்த பணிகளே அவருக்கு கைமேல் பலன் கொடுப்பது வித்தியாசமாகவும் , அதே நேரத்தில் மனதைத் தொடுவதாகவும் உள்ளது. மா. சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது செய்த பணிகளில் பூங்காக்கள் அமைத்தது, சென்னைவாசிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ,பூங்காக்கள் பொழுதுபோக்கு இடங்களாக மட்டுமில்லாமல் உடற்பயிற்சிக்கான தளமாகவும் அமைக்கப்பட்டது .
இதனை காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அவருக்கு நினைவு படுத்தினார்கள். அவர்களில் பலர் அவருடன் சுமார் ஒரு மணி நேரம் நடந்து சென்று வாக்கு சேகரித்தது , நாம் எதைச் செய்கிறோமோ, அதே நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதை நினைவுபடுத்தியது. இதுபற்றி மா. சுப்பிரமணியன் கூறும்போது நடந்து சென்றால்தான் மக்களுடைய பிரச்சினைகளை அறிய முடிகிறது ,அவர்களிடம் நேருக்கு நேர் மனம் விட்டு பேச முடிகிறது, இந்த தொகுதியில் நான் அறிமுகப்படுத்தி, செயல்படுத்திய சமுக நலத் திட்டங்கள், “பசுமை சைதை திட்டம்”, “கலைஞர் கணினி பயிற்சி மையம்”, மாணவர்களுக்கும் மேற்படிப்புக்கான , “மேற்படிப்பு விழிப்புணர்வு ஏற்பாடுகள்”, “வேலைவாய்ப்பு முகாம்”, “மழைநீர் சேகரிப்பு திட்டம்”, “கோதண்ட ராமர் கோவில் குளம் தூர் வாரியது” , குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட போது தினமும் 24 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கியது , மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல லட்சங்கள் செலவில் மக்கள் பணிகளை செய்து உள்ளேன், மக்கள் நலப்பணிகள் தொடர, மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.