வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் அரசு இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் - தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் அரசு இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-04-01 13:51 GMT
கரூர், 

கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி கரூர் தெற்கு நகரத்திற்கு உட்பட்ட அங்கு நகர், சிவாஜி நகர், போக்குவரத்து நகர் மற்றும் கரூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, காதப்பாறை ஆகிய ஊராட்சி பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது அவர் பேசியதாவது:- 

கரூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் அரசு இயற்கை வேளாண்மை கல்லூரி கரூர் ஒன்றியத்தில் அமைக்கப்படும். கல்லூரியில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்க இலவச செல்போன் வழங்கப்படும். ஆத்தூர் பூலாம்பாளையம், சோமூரில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.
 
பஞ்சமாதேவி அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும். கல்லூரி படிப்பு முடித்த பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு உதவித்தொகை தரப்படும். அறிவியல் துறை சேர்ந்த இளம் விஞ்ஞானிகளுக்கு தேவையான உபகரணங்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும். பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் சுயதொழில் தொடங்க மானியக்கடன் பெற்று தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்