மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே சித்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அரிஜன காலனியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 34). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் செட்டிப்பாளையம்-பல்லடம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். திருக்குமரன் நகர் அருகில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு சுரேஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.