ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Update: 2021-04-01 06:13 GMT
சோமரசம்பேட்டை, 

ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் பழனியாண்டி போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். மேலும், பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தும், ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு சில கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைமாடு கொடுத்து வரவேற்பதும், ஆளுயர மாலை போட்டும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது, அவர் மக்களிடம் பேசியதாவது சென்ற முறை சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்தாலும், மக்களாகிய நீங்கள் இந்த முறை எனக்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்தால் கண்டிப்பாக ஜெயிக்க வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் எனக்கு ஏற்படுகிறது. ஆகவே நான் இந்த முறை வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என்றார். பிரசாரத்தின் போது, தி.மு.க. கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்