மண்ணச்சநல்லூர் தொகுதியில் பிரசாரத்தின் போது சிறுவர்களுடன் கபடி விளையாடிய தி.மு.க. வேட்பாளர் கதிரவன்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-04-01 05:50 GMT
திருச்சி, 

தொடர்ந்து வேட்பாளர் கதிரவனுக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மாலை அணிவித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அப்போது அவர் பொதுமக்களிடம்  பேசியதாவது:-

தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் அனைத்து  கோரிக்கைகளும் நிறைவேற்றுகிற நல்லாட்சி வரும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தபடி குடும்ப அட்டை  உள்ள  பெண் களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை, பெண்களுக்கு மாநகர  பேருந்துகளில் இலவச பயணம். கொரோனா  காலத்தில் ஏற்பட்ட இழப்பை முன்னிட்டு வருகிற ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அன்று குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரூபாய் 4000 ஆயிரம். பால்விலை  லிட்டருக்கு 
3 ரூபாய் குறைப்பு.  பெட் ரோல்,   டீசல் குறைப்பு.  நடவடிக்கை உள்ளிட்ட  நல்ல திட்டங்கள் நம்மை வந்து சேர நீங்கள் மறக்காமல் உதயசூரியன்  சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும்  பிரசாரத்தின் போது, அங்கிருந்த பெண் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று 2½ மாத கைக்குழந்தைக்கு ஜஸ்வன் என்று அவர் பெயர் சூட்டினார். இதனைத்தொடர்ந்து அக்ரஹாரம்பட்டி, செந்தாமரைக்கண், காவல்காரன், புதுத்தெரு, செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் வாத்தலை பகுதியில் பிரசாரத்தின் போது, அந்த பகுதி சிறுவர்களுடன்  வேட்பாளர்  கதிரவன் கபடி  விளையாடி அவர்களை  உற்சாகப்படுத்தினார். 

பிரசாரத்தின் போது ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீதர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர்.  தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவனை ஆதரித்து  தி.மு.க.  முதன்மை செயலாளர் கே.என்.நேரு குருவாப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் செய்திகள்