இளம்பிள்ளை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் திருவிழா: தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2021-03-31 23:24 GMT
இளம்பிள்ளை:
இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன், காளியம்மன், கோவில் திருவிழா கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நாள் தோறும் இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது. தினமும் மாரியம்மன், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை புஷ்ப ஓடு எடுத்தலும், தொடர்ந்து சாமி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. பின்னர் சக்தி அழைத்தல் நடந்தது. மாலையில் காளியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில், இளம்பிள்ளை சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு மாரியம்மன், விநாயகர், காளியம்மன் சாமி வீதி உலா நடைபெற்றது.

மேலும் செய்திகள்