திருப்பூர் மாவட்டத்தில் 55 பேரூக்கு கோரோனா தொற்று
திருப்பூர் மாவட்டத்தில் 55 பேரூக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர், ஏப்.1-
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 324 ஆக உள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 41 பேர் குணமடைந்தனர்.
இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 733 ஆக உள்ளது.
இதுபோல் 365 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலனின்றி 226 பேர் பலியாகியுள்ளனர்.