ஊராட்சி அலுவலக பணம் கையாடல் செய்ததாக ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
அவினாசி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி அலுவலக பணத்தை கையாடல் செய்ததாக ஊராட்சி செயலார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவினாசி
அவினாசி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி அலுவலக பணத்தை கையாடல் செய்ததாக ஊராட்சி செயலார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஊராட்சி செயலாளர்
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் சிவராஜ். இவர் வரி வசூல் பணத்தை உடனுக்குடன் வங்கியில் செலுத்தாமல் கால தாமதம் செய்ததாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அதிகாரிகள் புதுப்பாளையம் ஊராட்சி அலுவலகம் சென்று வரி வசூல் தொடர்பான கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது வரி வசூல் தொகை ரூ. 8 லட்சத்து 73 ஆயிரத்து 922 வங்கியில் கட்டாமல் இருப்பது தெரியவந்தது.
பணியிடை நீக்கம்
இது குறித்து இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரன் கிராம ஊராட்சிகள் கூறும்போது புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக ஊராட்சி செயலாளர் சிவராஜ் வரி வசூல் இணங்களை உடனுக்குடன் வங்கியில் இருசால் செய்யாது காலதாமதம் செய்து செலுத்தி வருவதை அறிந்ததால், ஊராட்சியின் வரிவசூல் இணங்கள் முழு வடிவில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிவராஜ் ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து922 - ஐ இருசால் செய்ததை, கையாடலுக்கு ஒப்பாகக் கருதி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.