விபத்தில் தொழிலாளி பலி

ராஜபாளையத்தில் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-03-31 20:38 GMT
ராஜபாளையம், -
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அழகுமுத்து (வயது 35.). கட்டிடத்தொழிலாளி. ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மணிகண்டன் (32). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் ராஜபாளையத்திற்கு வந்து விட்டு ஊருக்கு திரும்ப சென்று கொண்டு இருந்தனர். 
இவர்கள் தென்காசி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது ராஜபாளையத்திலிருந்து இளந்திரை கொண்டான் பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வேன் பக்கவாட்டில் இடித்ததில் சாலையோரம் இருந்த தடுப்பின் மீது இரு சக்கர வாகனம் மோதி இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அழகுமுத்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டனுக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,  பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து வேன் டிரைவர் புத்தூரை சேர்ந்த முத்து கணேசனை கைது செய்து தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் விஜய் விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்