ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-31 20:34 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பண்டிதன்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவபாலன் என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் அவரிடம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்