பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரிய மாரியம்மன் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடி நகர் முழுவதும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
சாமி தரிசனம்
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் கோவில் பூசாரி ஹரிஹரன், துணை பூசாரிகள், வி.பி.எம். கல்வி நிறுவனங்களின் சேர்மன் வி.பி.எம். சங்கர், அறநிலையத்துறை அதிகாரிகள், மண்டகப்படி தாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூக்குழி திருவிழா
விழாவையொட்டி அம்மன் வீதி உலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.