வாணியம்பாடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.7 லட்சம் பறிமுதல்

வாணியம்பாடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.7 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-31 20:19 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி கொல்லபள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அலுவலர் செல்வி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம், மாயனூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த தசரதன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணமின்ற கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட வெலதிகமணிபெண்டா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ஆந்திராவில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த சீனிவாசன் என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.6 லட்சம் மற்றும் 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்