பாளையங்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல்
பாளையங்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பூமாலை (வயது 70). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி அங்கு நின்றுகொண்டு கீழே குதித்து தற்கொலை செய்வதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு படைவீரர்கள் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் விரைந்து சென்று தண்ணீர் தொட்டி மீது ஏறி பூமாலையை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.