மேல்விஷாரம் பகுதியில் 199 அரிசி மூட்டைகள் பறிமுதல்

மேல்விஷாரம் பகுதியில் 199 அரிசி மூட்டைகள் பறிமுதல்

Update: 2021-03-31 20:06 GMT
ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்த வேனை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வேனில், 10 கிலோ எடை கொண்ட 199 அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
அதிகாரிகளை பார்த்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். 
இதனையடுத்து அதிகாரிகள் உரிய ஆவணமின்றி வேனில் இருந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்