மதுரையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல்

மதுரையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல்

Update: 2021-03-31 19:50 GMT
மதுரை,ஏப்
மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் சிவபாலன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விஜயின் நண்பர்கள் சிலர் சிவபாலன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக குமாரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்