மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அருள்மொழி கிராமம் உள்ளது. இங்கு முற்கால சோழர்கள் காலத்தில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் முற்றிலும் சிதிலமடைந்து காணப்பட்டது. இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பணி குழுவினர் ஆகியோர் ஒன்றிணைந்து கட்டுமான பணிகளை தொடங்கினர். அந்த பணிகள் நிறைவு பெற்றதைதொடர்ந்து கடந்த 28-ந் தேதி காலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. பின்னர் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. அடுத்தடுத்த நாட்களில் மூன்று கால ஹோமங்களும், பூர்ணாகுதியும் நடைபெற்றன. நேற்று காலை யாக பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி ஆகியவற்றை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிவாச்சாரியார்கள் மற்றும் சிவனடியார்களை கொண்டு சிறப்பு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தாடர்ந்து பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.