பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-03-31 19:44 GMT
மதுரை,ஏப்.
கடந்த 2015-ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் பயிற்சி மருத்துவர்களின் பணி நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த உத்தரவால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் உத்தரவை திரும்பப் பெறாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்