செங்கோட்டையில் வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அச்சன்புதூர்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடை செய்யும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகில் தாசில்தார் ரவிகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து செங்கோட்டைக்கு வந்த லோடு ஆட்டோவில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பணத்தை கடையநல்லூர் தாலுகா அலுவலகம் மூலமாக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.