மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் லாரி கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் லாரி கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-31 18:54 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி கிராமத்தை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 31) லாரி கிளீனர். இவருடைய மனைவி  நூர்ஜஹான். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி, அலாவுதீன், மனைவி நூர்ஜஹானிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அலாவுதீன் வீட்டுக்கு அருகில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்  பக்கத்தினர் உடனே அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு அலாவுதீன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்