தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி சிறுவன் படுகாயம்
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி சிறுவன் படுகாயம் அடைந்தான்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பிதிரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் நவீன் (வயது 17). இவன் தனது உறவினர் சிவராஜ்குமார் என்பவரோடு நேற்று நந்திமங்கலம் கிராமத்திலுள்ள ஜல்லிமாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது காட்டுப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டுயானை 2 பேரையும் விரட்டியது. இதனால் அவர்கள் 2 பேரும் வேகமாக ஓடினர். அப்ேபாது சிறுவனை, யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் நவீன் படுகாயம் அடைந்தான். அவனை சிவராஜ்குமார் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஜவளகிரி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.