கீழக்கரை பகுதியில் மணல் திருட்டு

கீழக்கரை பகுதியில் மணல் திருட்டு நடந்து வருகிறது

Update: 2021-03-31 18:44 GMT
கீழக்கரை
கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதிகரித்திருக்கும் தண்ணீர் பஞ்சத்திற்கு, கீழக்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மணலை அதிக ஆழமாக தோண்டி அள்ளியதே காரணம் என்கின்றனர். அரசு அனுமதிக்கும் அளவை தாண்டி தொடர்ந்து மணல் எடுப்பதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதியில் நீர் நிலைகள் முற்றிலுமாக அழிந்து விடும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்