தர்மபுரி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட 50 பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.