வியாபாரி தற்கொலை

சாத்தான்குளம் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-31 18:35 GMT
சாத்தான்குளம், ஏப்.1-
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் அப்புடாப் ஞானம் (வயது 47). கடலை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஞானஜெயம் (44). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அப்புடாப் ஞானம், குடிப்பழக்கம் காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு வயிற்றுவலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அப்புடாப் ஞானம், தனது மனைவியிடம் போனில் பேசியபோது தான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து மீரான்குளம் பகுதியில் அப்புடாப், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து மனைவி ஞானஜெயம் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்