கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம்

கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் நடந்தது.;

Update: 2021-03-31 18:34 GMT
நொய்யல்
நொய்யல் அருகே குளத்துபாளையத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். அதனை தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கொரோனாதடுப்பூசி போட்டனர். தொடர்ந்து முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாத்திரை வழங்கப்பட்டது. இதில் குளத்துப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்