விவசாயி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
செஞ்சியில் விவசாயி வீட்டில் 25 பவுன் நகை திருடு போனது.
செஞ்சி,
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் வெங்கடேசன் (வயது 57). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் நிலத்துக்கு சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி நகைகளை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.