ஒரே நாளில் 5 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
மதுரையில் ஒரே நாளில் 5 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை,ஏப்
மதுரை காளவாசல் சொக்கலிங்க நகரை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 26), சுகப்பிரகாஷ் (26). விளாச்சேரி பொட்டமலையை சேர்ந்த பிரசாத் (28), கரண்ராஜ் (20), சிவகங்கை மாவட்டம் கொந்தகை, கட்டமன்கோட்டை பகுதியை சேர்ந்த பிரசன்னா (21) ஆகியோர் மீது நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.