கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெகமம்,
நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கப்பளாங்கரை கிராமத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் நெகமம் பகுதியில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையொட்டி கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் பிரசாரம், அலட்சியம் போன்ற காரணங்களால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க நெகமம் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பது உள்பட பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.