மூங்கில்துறைப்பட்டு அருகே இருதரப்பினரிடையே மோதல் 3 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே இருதரப்பினரிடையே மோதல் 3 பேர் கைது;

Update:2021-03-31 21:56 IST
மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராயசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவா மனைவி பாஞ்சாலை(வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் இளையராஜா(37) என்பவருக்கும் இடையே கோவிலில் சாமி கும்பிடும்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்சினையால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். 

பின்னர் இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் பாஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் சின்னதுரை மகன் ஏழுமலை(26), சாமிநாதன் மகன் இளையராஜா(37) ஆகியோர் மீதும், இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் வடிவேல் மகன்கள் சிவா(38), ராஜா(30), ஏழுமலை(32) ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, இளையராஜா, ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்