அ.தி.மு.க.வினர் மீது தி.மு.க.வினர் போலீசில் புகார்

அ.தி.மு.க.வினர் மீது தி.மு.க.வினர் போலீசில் புகார் செய்தனர்.;

Update: 2021-03-31 05:37 GMT
கோவை

கோவை சித்தாபுதூர் பகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் செய்வதாக தகவல் பரவியது. இதையடுத்து தி.மு.க.வினர் அந்த பகுதியில் குவிந்தனர். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேட்பாளர் நா.கார்த்திக், தி.மு.க. வக்கீல் பிரிவினர் காட்டூர்  போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் பகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக பூத் சிலிப் வினியோகம் செய்கின்றனர். 

மேலும் அப்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக தெரிகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

 இதனிடையே தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- தொண்டாமுத்தூர் தொகுதியில் வெள்ளியங்கிரி பகுதியில் வாக்குச்சாவடி எண் 51-க்கு உட்பட்ட பகுதியில் 700 வாக்காளர்கள் ஒரே வளாகத்திற்குள் இடம்பெற்று உள்ளனர். 

இவர்கள் அனைவரும் ஒரே வளாகத்தில் வசித்து வருகின்றனர். ஒரே முகவரியில் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்