வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது.
கோவை
கோவையில் உள்ள எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டுக்கு பெங்களூரு, ஓசூர், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் தினமும் 60 முதல் 80 டன் வரை தக்காளி கொண்டு வரப்படுகின்றன.
இதுதவிர கோவை மாவட்டம் நாச்சிபாளையம், திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.
அதன்படி எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.12 முதல் 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது.
மற்ற காய்கறிகளின் விலை (கிலோ) விவரம் வருமாறு:-
கேரட் ரூ.30, வெண்டைக்காய் ரூ.20, கத்தரிக்காய் ரூ.15, பச்சமிளகாய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.