ஒரே நாளில் ரூ.16 லட்சம் பறிமுதல்

ஒரே நாளில் ரூ.16 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-31 05:35 GMT
கோவை

கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது

கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 

நேற்று கிணத்துக்கடவு தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்து 90 ஆயிரம், கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.97 ஆயிரம், சிங்காநல்லூர் தொகுதியில் ரூ.1 லட்சம் என நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சத்து 40 ஆயிரத்து 950-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவையில் நேற்று வரை பணம் மற்றும் தங்கம், இதர பொருட்கள் என ரூ.53 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 836 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 148 புகார்கள் வந்து உள்ளது. இதில் 100 புகார்களுக்கு தீர்வு காணப்பட் டது. 

43 புகார்கள் தீர்வு நிராகரிக்கப்பட்டு உள்ளது. 5 புகார்கள் நிலுவையில் உள்ளன. செயலி மூலம் பொதுமக்கள் 621 புகார் மனுக்களை அளித்து உள்ளனர். 

இதில் 468 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. 148 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. 5 மனுக்கள் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்