கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

ஊட்டியில் கார் கண்ணாடியை உடைத்து திருடிய ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-03-31 03:23 GMT
ஊட்டி

ஊட்டி நகரின் மையப்பகுதியான கமர்சியல் சாலையில்  கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஒரு நபர் காரின் கண்ணாடியை உடைத்து கைப்பையை திருடினார். 

இதை பார்த்த பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து ஊட்டி நகர மத்திய போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 39) என்பதும், அவர் ஏற்கனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், மேலும் 2 பேருடன் திருடுவதை வழக்கமாக கொண்டதும் தெரியவந்தது.  

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவாக உள்ள மூர்த்தியின் நண்பர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள்.

 அதுபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்களின் கண்ணாடியை உடைத்து செல்போன், தங்க நகை திருடப்பட்டது. 

எனவே அந்த சம்பவத்தில் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்