ஆட்டையாம்பட்டி அருகே சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம்

சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம்;

Update:2021-03-31 04:50 IST
ஆட்டையாம்பட்டி:
ஆட்டையாம்பட்டி அருகே ராக்கிபட்டி பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின்  வழியாக சென்று திருத்தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்