இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே உள்ள மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். விசைத்தறித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 27). இவர் விவசாய தோட்டத்தில் சோளத்தட்டு அறுத்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து விட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பூதப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.