ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
குலதெய்வம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பில் பேச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குல தெய்வ கோவிலாகும். இந்த கோவிலில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலிலுக்கு வந்தார். அவரை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், சந்திரபிரபா முத்தையா எம்.எல்.ஏ., அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.