தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.11 லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தரகம்பட்டி
கரூர் மாவட்டம், தரகம்பட்டி-குஜிலியம்பாறை பிரிவு சாலை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சூர்யா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கருங்குளத்தை சேர்ந்த சாலமோன் ராஜா என்பவரது காரை சோதனையிட்டபோது ரூ.7 லட்சத்து 61 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து அவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியபோது தரகம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்திற்கு வையம்பட்டியில் உள்ள ஒரு வங்கி கிளையிலிருந்து எடுத்து வந்ததாக தெரிவித்தனர். ஆனால் அதற்கான ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கிருஷ்ணராயபுரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாரதி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று சின்னதாராபுரம்-கரூர் சாலையில் பள்ளபாளையம் பிரிவு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவை மாவட்டம் சரோஜ் பிரசாந்தி அபார்ட்மெண்ட் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ராம்குமார் மற்றும் சென்னை அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரபு ஆகியோர் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகுடீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.