தோகைமலை
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளை கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி ஆகிய கோவிலின் திருவிழா தொடங்கி நடைபெற்றது. விழாவின் முதல் நாள் காளியம்மனுக்கு கரகம் பாலித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது காளியம்மன் பெரிய தேரிலும், பகவதி அம்மன் முத்து பல்லக்கிலும், கருப்பசாமி குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் முன்பாக எருமைக் கிடா வெட்டுதல், காளியம்மனுக்கு காவல் கொடுத்தல், மஞ்சள் நீர் கரகம் எடுத்து விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கள்ளை, சுக்காம்பட்டி, மங்கப்பட்டி, சின்னகள்ளை, மணியம்பட்டி, பூவாய்பட்டி, முடக்குபட்டி, குழந்தைபட்டி ஆகிய எட்டு பட்டியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.