2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 20 வகையான பொருட்கள் தயார்

ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 20 வகையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Update: 2021-03-30 20:13 GMT
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 20 வகையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
சட்டமன்ற தேர்தல்
வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியன அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் தேர்தலுக்கு முந்தையநாள் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதேபோல் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ள கையுறைகள், கிருமிநாசினி, தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கான முக கவசம் உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் தனித்தனி பெட்டிகளில் வைத்து தயார் நிலையில் உள்ளன.
20 வகையான பொருட்கள்
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் காகிதங்கள், பேனா, பென்சில், ரப்பர், பசை, கயிறு, சீல் வைப்பதற்கான பொருள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சிறிய ரப்பர்பேண்ட், ஓட்டுச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் உள்பட 20 வகையான பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த பொருட்கள் தனித்தனியாக சாக்குப்பையில் வைத்து கட்டும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகம், ஈரோடு தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது. ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பயிற்சி கலெக்டர்கள் சங்கீதா, மதுமிதா ஆகியோர் முன்னிலையில் அரசு ஊழியர்கள் பார்சல் செய்தனர்.

மேலும் செய்திகள்