நெல்லையில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா
நெல்லையில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
நெல்லை:
கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நெல்லை மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 538 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 148 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 215 பேர் பலியாகியுள்ளனர்.