கடையத்தில் வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

கடையத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-30 19:57 GMT
கடையம்:

கடையத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள சூட்சமுடையார் சாஸ்தா கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தோரணமலை ரோடு ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த அருள்ராஜ் மகன் பிரவீன் (வயது 25) என்பவர் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்துள்ளார். 

அப்போது வல்லத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (28), அதே பகுதியை சேர்ந்த கெம்புமுத்து மகன் கண்ணன் (36) ஆகிய 2 பேரும்  பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கேட்டபோது தர மறுத்து தகராறு செய்தனர். 

மேலும் பிரவீனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்