திசையன்விளையில் காரில் கொண்டு சென்ற தி.மு.க. தொப்பிகள் பறிமுதல்

திசையன்விளையில் காரில் கொண்டு சென்ற தி.மு.க. தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-03-30 19:13 GMT
திசையன்விளை:

திசையன்விளை- இடையன்குடி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி டெபி, போலீஸ் ஏட்டு நந்தகோபால் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட 600 தொப்பிகள் கொண்டு சென்றது தெரியவந்தது.

அந்த தொப்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து திசையன்விளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்