கமுதி
கமுதி அருகே சடையனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி பெத்துராஜ் (வயது 24). இவர் அபிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.