பொய்கை வாரச்சந்தையில் வர்த்தகம் கடும் சரிவு
பொய்கை வாரச்சந்தையில் வர்த்தகம் கடுைமயாக சரிவடைந்துள்ளது.
வேலூரை அடுத்த அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் கறவை மாடுகள் மற்றும் விவசாயிகள் பயிரிடப்படும் காய் கனிகள், வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் உள்பட அனைத்தும் இந்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மாவட்டத்திலேயே அதிகமாக வருவாய் ஈட்டித்தரும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாகவும் நேற்று நடந்த வாரச்சந்தையிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வியாபாரிகளும், பொதுமக்களும் மாடுகள் வாங்க வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் கொண்டு வரப்படவில்லை.
இதனால் வாரத்திற்கு சுமார் ரூ.2 கோடி வர்த்தகம் நடைபெறும் வாரச்சந்தையில் நேற்று குறைந்த அளவில் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.