வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி முல்லை நகரை சேர்ந்தவர் தீபன்ராஜ்(வயது 25). இவர் மேலசோத்தூரணியில் உள்ள சித்தி வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் முன்விரோதம் காரணமாக தாக்கினர். மேலும் தீபன்ராஜை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த தீபன்ராஜ் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மேலச்சோத்தூரணியை சேர்ந்த சக்திவேல்(31), அரவிந்தராஜ் (30) ஆகிய இருவரை கைது செய்தனர். இதுதொடர்பாக தர்மராஜ், அஜய்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்